அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
வண்ணார்பேட்டை:
நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட தலைவர் செல்வராஜா முன்னிலை வைத்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாதாந்திர ஓய்வூதிய திட்டம், அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இலவச சிகிச்சை திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.