அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் உடையாளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சென்னமராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிவிட்டதாக கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.