'அரசு மருத்துவர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வது குறைந்துள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அரசின் அனுமதி பெற்ற பிறகு தான் அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
சென்னை,
அரசு மருத்துவர்கள் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்வது குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவர்கள் அரசின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தார்.
அரசின் அனுமதி பெற்ற பிறகு தான் அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்றும், தேவையற்ற வகைகளில் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவது இல்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து துறை ரீதியாக பரிசீலித்த பிறகு தான் அனுமதி அளிக்கப்படுவதாகவும், தற்போது அரசு மருத்துவர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வது குறைந்துள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.