அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க கூட்டம்

விழுப்புரத்தில் அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க கூட்டம் நடந்தது.;

Update: 2022-12-11 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுகுந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை விரைவாக நிரப்பிட வேண்டும், அனைத்து துறைகளிலும் பழுதடைந்த பழைய வாகனங்களை நீக்கம் செய்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.Government Department Vehicle Drivers Association meeting 

Tags:    

மேலும் செய்திகள்