ஊட்டி
75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இருந்து சேரிங்கிராஸ் வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது.
பேரணியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கையில் தேசிய கொடி ஏந்தி சென்றனர். இதற்கு தேசிய மாணவர் படை குழுவின் முதன்மை பொறுப்பாளர் எபனேசர் தலைமை தாங்கினர். கேப்டன் விஜய், கல்லூரி உடற்கல்வி பொறுப்பாளர் ரவி மற்றும் நுண்கலை ஒருங்கிணைப்பாளர் ஷோபனா, ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.