அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-06-01 18:16 GMT

பரமக்குடி

தமிழகம் முழுவதும் 149 அரசு கலைக்கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு கல்வி ஆண்டில் 11 மாதங்கள் பணிபுரிவது வழக்கம். 2021-22-ம் கல்வி ஆண்டு ஜூன் 13-ம் தேதி வரை அவர்களுக்கான பணி உள்ள நிலையில் நேற்று முதல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் 63 கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு கோஷமிட்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதால் கவுரவ விரிவுரையாளர்கள் பணிகளை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் தேர்வுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்