விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் தடுத்து நிறுத்தம்; பயணிகள் பரிதவிப்பு

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் வந்த பயணிகள் பரிதவித்தனர்.;

Update: 2023-10-04 18:45 GMT

விக்கிரவாண்டி, 

சென்னையில் இருந்து நேற்று மாலை விழுப்புரம் கோட்ட அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் இரவு 9.20 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, பஸ்சுக்கான சுங்க கட்டணம் செலுத்தாதது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ்சை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, பஸ் கண்டக்டரிடம் சுங்க கட்டணத்தை செலுத்தி விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் டிரைவர், கண்டக்டர் கட்டணத்தை செலுத்தாமல் பஸ்சில் வந்த பயணிகள் 20-க்கும் மேற்பட்டோரை கீழே இறக்கி விட்டனர். இதனால் பரிதவித்த பயணிகள் ஆத்திரமடைந்து நாங்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல விழுப்புரத்தில் ரெயிலை பிடிக்க வேண்டும் என கூறி, பஸ்சை இயக்குமாறு டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் ¾ மணி நேரத்துக்கு பிறகு அவ்வழியாக வந்த மாற்று பஸ் மூலம் பயணிகளை அனுப்பி வைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்