நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரியில் இருந்து நெல்லைக்கு தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி நேற்று மாலையில் நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த பஸ்சின் டிரைவர் பெர்மானஸ் என்பவர் பஸ்சை இயக்காமல் இருந்தார்.
மேலும் பஸ்சின் முன்பு நின்று கொண்டு திடீரென கோஷங்கள் எழுப்பியவாறு தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மேல் அதிகாரிகள் அதிகளவில் பணிச்சுமையை ஏற்படுத்துவதாகவும், தன்னை அவதூறாக பேசி வருவதாகவும்" என்று குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து டிரைவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் தர்ணாவை கைவிட்டு அந்த பஸ்சை டிரைவர் இயக்கினார்.