கடலூர்: தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த அரசு பஸ் - 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

அரசு பஸ் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

Update: 2023-09-18 03:56 GMT

கடலூர்,

சேலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் (சென்டர் மீடியன்) மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.     

Tags:    

மேலும் செய்திகள்