கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருதுபெற்ற அரசு பள்ளிதலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா

கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருதுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update: 2023-09-07 18:45 GMT

கோவில்பட்டி:

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் குமாருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. பள்ளியில் நடந்த விழாவில் உதவி தலைமை ஆசிரியர்கள் சுதாகரன், சந்திரமதி, கணேஷ், என்.எஸ்.எஸ்.ஆசிரியர் ஆனந்த பிரபாகரன், என்.சி.சி. ஆசிரியர் பூப் பாண்டி, ஆசிரியர் ராஜசுந்தர் மற்றும் பலர் பாராட்டி பேசினா். தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்து பேசினார். முன்னதாக விழாவுக்கு வந்த அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், பழைய மாணவர்கள், பேண்டு வாத்தியம் முழங்க, எட்டயபுரம் ரோடு கால்நடை மருத்துவமனை முன்பிருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்