அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தர்மபுரி, பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் கருணாநிதி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

Update: 2022-06-04 18:13 GMT

தர்மபுரி:

தர்மபுரி மருத்துவமனை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்த நாள் விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கருணாநிதி பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தலைமை தாங்கி 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார்.

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார், மாவட்ட அரசு வக்கீல் பி.கே.முருகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் சேட்டு, கூட்டுறவு சங்கத் தலைவர் லட்சுமணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காவேரி, நகராட்சி கவுன்சிலர் ஜெகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம் மருத்துவமனை

இதேபோன்று பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க. வர்த்தகர் அணி சார்பில் கருணாநிதி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்ம செல்வன் தலைமை தாங்கி 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார்.

மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் வைத்திலிங்கம், சோலைமணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குமார், பென்னாகரம் ஒன்றிய துணை செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, முன்னாள் ஒன்றிய சேர்மன் தென்னரசு, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், மூர்த்தி, தமிழரசன், சென்றாயன், வெங்கடாசலம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு அன்னதானம்

இதேபோன்று தர்மபுரி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தங்கமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் நாட்டான் மாது, நகர பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முல்லைவேந்தன், சுருளிராஜன், அன்பழகன், ராஜா, கனகராஜ், காசிநாதன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ரவி, குமார், கவுதமன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மொரப்பூர்

மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.டி.டி.செங்கண்ணன் தலைமை தாங்கினார். தாசரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரங்கநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன்ராசு, பழனியம்மாள் மகாலிங்கம், திருமால், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பன்னீர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சசிகுமார், நந்திக்குமார், நிர்வாகிகள் முல்லை கோபால், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சிவகாமி குமார், தாசரஅள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஜெமினி, நிர்வாகிகள் பிரகாசம், கடம்பல்பட்டி கிளை செயலாளர் சின்னக்கன்னு, சிவம், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மதன் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்