பரமத்தி அருகேஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

Update: 2023-08-06 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்தி, கபிலர்மலை சாலையில் வசிப்பவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் ஒத்தக்கடைக்கு இறைச்சி வாங்குவதற்காக சென்றார். பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அர்த்தனாரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் ஜோதி அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துள்ளனர். சுதாகரித்துக் கொண்ட ஜோதி தாலி சங்கிலியை கையில் பிடித்துக் கொண்டு மர்மநபர்களிடமிருந்து போராடியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் மர்ம நபர்கள் ஜோதியிடமிருந்து பாதி சங்கிலியை மட்டும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் படுகாயம் அடைந்த ஜோதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்