தங்கச்சங்கிலி பறிப்பு

மானூர் அருகே தம்பதி மீது தாக்குதல்; தங்கச்சங்கிலி பறிப்பு;

Update:2022-08-04 02:56 IST

மானூர்:

மானூர் அருகே உள்ள கம்மாளன்குளத்தை சேர்ந்தவர், பார்வதிராஜன் மனைவி புவனேஸ்வரி (வயது 36). சத்துணவு அமைப்பாளர். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பெருமாள் (47) என்பவருக்கும் தெருவில் கழிவுநீர் செல்வது சம்பந்தமாக பிரச்சினை இருந்துள்ளது. சம்பவத்தன்று பார்வதி ராஜன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெருமாள், அவரது உறவினர் மாரியப்பன் (45) ஆகியோர் பார்வதிராஜனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த புவனேஸ்வரி வெளியே வரவும் அவரை, அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (43), அவருடைய மனைவி தேவி (38), மகள் ஆகியோர் சேர்ந்து தாக்கியதோடு, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த புவனேஸ்வரி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்