நாமக்கல் ராஜீவ் காந்தி நகரில் உள்ள மங்கள மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக சாமிக்கு பால், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், பழங்கள் உள்பட 16 பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
அதன் பிறகு மங்கள மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.