கழுகுமலையில்ஆமைவேகத்தில் நடக்கும்ஓடைப்பாலம் வேலையால் அவதி

கழுகுமலையில்ஆமைவேகத்தில் நடக்கும் ஓடைப்பாலம் வேலையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2023-10-12 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை - அத்திப்பட்டி சாலையில் ஆறுமுகம் நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குறுகிய ஓடை பாலமானது பழுதடைந்திருந்தது. இதனால், கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது மினி பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் செல்வதற்காக பாலத்தின் அருகே சர்வீஸ் சாலை போடப்பட்டது. தற்போது கழுகுமலை பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால் சர்வீஸ் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சகதியில் சிக்கி விழுந்து அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் சர்வீஸ் சாலைய கடப்பதற்குள் விபத்து அபாயமும் உள்ளது. இந்த பாலம் வேலை ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த பணியை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு விரைவாக திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்