உச்சினிமாகாளி அம்மன்கோவிலில் விளக்கு பூஜை
குலசேகரன்பட்டினத்தில் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.;
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெரு உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் வருஷாபிசேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.