வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த சுந்தரகுஜாம்பிகை அம்மன்
வளையல் அலங்காரத்தில் சுந்தரகுஜாம்பிகை அம்மன் அருள்பலித்தார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜாம்பிகை உடனாகிய அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுந்தரகுஜாம்பிகை அம்மனுக்கு வளையல் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான வளையல்களால் சுந்தர குஜாம்பிகை அம்மன் காத்யாயினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர். ஆடிப்பூரத்தையொட்டி நாகை அனுச்சியங்குடி காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.