கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.;
கடத்தூர்
கோபி அருகே உள்ள தாழக்கொம்புபுதூரை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் உதயகுமார் (வயது 21). இவர் ஆப்பக்கூடலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதேபோல் கோபி அருகே உள்ள ஆப்பக்கூடல் வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இறந்துவிட்டார். இவருடைய மகள் காயத்ரி (19). இவரும் ஆப்பக்கூடலில் உள்ள அதே பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டாக உதயகுமாரும், காயத்ரியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதுடன், பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கதிர்வேல் வீட்டுக்கு காயத்ரி அழைத்து செல்லப்பட்டாா்.