கோபி சிறையில்கைதிகளுக்கு செல்போன் கொடுத்தபோலீஸ்காரர் பணி இடைநீக்கம்
கோபி சிறையில் கைதிகளுக்கு செல்போன் கொடுத்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்
கோபி சிறையில் கைதிகளுக்கு செல்போன் கொடுத்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கைதிகளிடம் செல்போன்
கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கைதிகள் செல்போன்கள் வைத்திருப்பதாக கோவை மத்திய சிறை உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கைதிகள் உள்ள அறைகளுக்கு சென்று சிறைத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கோவையைச் சேர்ந்த கவுதம் (வயது 29), ஈரோட்டை சேர்ந்த கணபதி சிங் (40) ஆகியோரிடம் செல்போன்கள், சிம்கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
பணி இடைநீக்கம்
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோபி மாவட்ட சிறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலரான எலத்தூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் கைதிகளுக்கு செல்போன் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.