வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்

Update: 2023-06-23 18:45 GMT

ராமநத்தம்

வாரச்சந்தை

வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பக்ரீத்பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து நேற்று சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.

இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேப்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை போன்ற வெளியூர்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்தனர். இதில் வெள்ளாடு, கொடி ஆடு, செம்மரி ஆடு ஆகிய ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

ரூ.6 கோடிக்கு விற்பனை

ஆடுகளை வாங்குவதற்காக பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், வேலூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாகனங்களில் வந்திருந்தனர். இவர்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று வரை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. இதில் ஒரு ஆடு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிபட்சம் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆனதாக வியாபாரிகள் கூறினர். ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்