அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.;

Update: 2023-04-18 19:15 GMT

ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடை மற்றும் விவசாய விளைபொருட்கள் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். காலை நேரத்தில் நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாகனங்களில் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். விவசாயிகள், இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களும் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

வருகிற 22-ந் தேதி முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன்காரணமாக அத்தியூர் வாரச்சந்தை நேற்று அதிகாலையிலேயே களைகட்டியது. விற்பனைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

இதனை வாங்குவற்காக வியாபாரிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்ததால் சிறு வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்