மர்ம விலங்கு கடித்த காயங்களுடன் ஆடுகள் சாவு; சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்

மர்ம விலங்கு கடித்த காயங்களுடன் ஆடுகள் இறந்து கிடந்தன.;

Update:2023-09-07 20:03 IST

பூண்டி ஒன்றியம் மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு ரஜினி தூங்க சென்றார் நேற்று காலை அவர் கொட்டகைக்கு வந்து பார்த்தபோது 8 ஆடுகள் கழுத்தில் கடிப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தன. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை டாக்டர்கள் ஆடுகளை சோதனை செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுத்தையின் நடமாட்டம் கிராம பகுதிகளில் இருந்ததாக தெரிவித்தனர்.

தடயங்களை ஆய்வு செய்து விசாரணை செய்த பூண்டி வனத்துறையினர் கூறும்போது, தடயங்களை ஆராய்ந்ததில் இது சிறுத்தையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் ஒருவேளை சிறுத்தை ஆடுகளை கடித்து இருந்தால் ஆட்டை இழுத்துக் கொண்டு வெளியே சென்று இருக்கும் எனவும் காட்டில் வாழும் பெரிய விலங்குகளோ அல்லது பெரிய காட்டுப் பூனையோ ஆடுகளை கடித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்