வந்தவாசி
வந்தவாசி அடுத்த டீ மாம்பட்டு கிராமத்தில் மர்ம நோய் தாக்கி 25-க்கும் மேற்பட்ட செம்மரி ஆடுகள் இறந்து வருவதால் ஆடு வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
வந்தவாசி அருகே டி.மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்.
இவர் 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் மர்ம நோயால் 3 அல்லது 4 ஆடுகள் தொடர்ந்து இறந்து வருகிறது. இன்று 3 செம்மறி ஆடுகள் இறந்தது.
இதுகுறித்து தெள்ளார் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து செம்மறி ஆடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட ஆடு வளர்ப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.