விவசாய தோட்டத்தில் ஆடு திருட்டு

விவசாய தோட்டத்தில் ஆடு திருட்டு போனது.

Update: 2023-02-04 21:38 GMT

தலைவாசல்:

தலைவாசல் அருகே உள்ள மும்முடி பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 52). இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக்கிடாவை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி, இதுகுறித்து தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்