திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது கே.கொடிக்குளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது50). இவர் ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் முருகவேல் அவருக்கு சொந்தமான 20 ஆடுகளை அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் இரவு அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது அதில் 10 ஆடுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். யாரோ மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தில் வந்து ஆடுகளை திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து முருகவேல் அளித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.