புள்ளம்பாடியில் தங்கப்பல்லக்கில் குளுந்தாளம்மன் வீதி உலா

புள்ளம்பாடியில் தங்கப்பல்லக்கில் குளுந்தாளம்மன் வீதி உலாநடைபெற்றது.

Update: 2023-05-05 19:23 GMT

புள்ளம்பாடியில் பிரசித்தி பெற்ற குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 18-ந்் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 3-ந்தேதி காலை 10 மணியளவில் குளுந்தாளம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கிடாவெட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குளுந்தாளம்மன் தங்கபல்லக்கில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மஞ்சள் நீராட்டுவிழாவும், சாமி ஊர்வலமும் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) சாமி குடிபுகுதல் மற்றும் விடையாற்றி நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான விழாநிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்