இணையதளத்தை பயன்படுத்தும்போது மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

இணையதளத்தை பயன்படுத்தும்போது மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

Update: 2022-10-10 18:38 GMT

காரைக்குடி

இணையதளத்தை பயன்படுத்தும்போது மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) துரை தலைமை தாங்கினார். சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காரைக்குடி ஆரிய பவன் சந்திப்பில் தொடங்கிய இந்த ஊர்வலம் கல்லூரி சாலை வழியாக அழகப்பா அரசு கல்லூரியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் வந்தனர். கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களிடத்தில் விளக்கிப் பேசினார்.

அப்போது ஆன்லைனில் பரிசுகள் விழுந்திருப்பதாக கூறி நடைபெறும் மோசடி குறித்தும், வங்கி கணக்கு விவரங்களை கேட்டுப் பெற்று அதன் மூலம் நடைபெறும் பண மோசடி குறித்தும் கூறிய அவர் அவ்வாறு நடைபெறும் இணையதள குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உதவி எண்ணான 1930 என்ற எண்ணைப் பயன்படுத்தி தொடர்புடையவர்கள் புகார் அளித்தால் உடனடியாக தீர்வு காணப்படும் என்றார்.

விவரங்களை தெரிவிக்க வேண்டாம்

மேலும் மாணவிகள் ஆன்லைனில் முன்பின் அறியாதவர்களிடம் அவர்கள் தொடர்புடைய விவரங்களை தெரிவிக்க வேண்டாம். இணையதளத்தை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் மாணவிகள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்