மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஜனசிக்ஷா கலாலயம் நடன பள்ளி சார்பில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.;
நவராத்திரியை முன்னிட்டு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கொணவட்டம் ஜனசிக்ஷா கலாலயம் நடன பள்ளி சார்பில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை கோட்டை கோவில் வளாகத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாணவிகள் 20 பேர் கலந்துகொண்டு பக்தி பாடலுக்கு ஏற்றவாறு பரதநாட்டியத்தில் அசத்தினர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் பரதநாட்டிய நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஜனசிக்ஷா கலாலயம் நடன பள்ளி இயக்குனர் சாந்தி பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஜனசிக்ஷா கலாலயம் நடனப்பள்ளி சார்பில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு 10 ஆயிரம் மாணவ-மாணவிகளை ஒன்றிணைத்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.