குழந்தை திருமணத்தால் சிறுமி கர்ப்பம்

திருப்புவனம் அருகே குழந்தை திருமணத்தால் சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இது தொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.;

Update:2022-07-03 00:46 IST

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், 13 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனே அவரை சிகிச்சைக்காக பூவந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த போது, அவரது வயதை அறிந்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கொடுத்த அறிவுரையின் பேரில் சிறுமி பழையனூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு சிறுமியின் கணவர், மாமியார், சிறுமியின் தந்தை, தாய் ஆகிய 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்