மின்சாரம் தாக்கி சிறுமி பலி
செஞ்சி அருகே மின்சாரம் தாக்கியதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.;
செஞ்சி,
செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). தொழிலாளி. இவரது மகள் மோகனா (4). நேற்று காலை சங்கரின் மனைவி வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த மோகனா டேபிள் பேனை இயக்குவதற்காக அதன் ஒயரை பிளக்கில் மாட்ட முயன்றாள். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தாள். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், மோகனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.