பள்ளி பஸ் மோதி சிறுமி பலி
கச்சிராயப்பாளையம் அருகே பள்ளி பஸ் மோதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.;
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணை காணங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சஞ்சனா (வயது 4). இவள் கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் வழக்கம்போல் பள்ளி பஸ்சில் சஞ்சனா வீடு திரும்பினாள். வீட்டின் அருகில் பஸ் நின்றதும் அதில் இருந்து இறங்கிய சஞ்சனா பள்ளி பஸ்சின் முன்பு நடந்து வீட்டுக்கு செல்ல முயன்றாள். அப்போது டிரைவர் பஸ்சை இயக்கியதாக தெரிகிறது. இதில் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே சஞ்சனா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.