இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டா் விசாரணை நடத்தி வருகிறார்.;
இளம்பெண்
பாளையங்கோட்டை பெருமாள்புரம் மீட்பர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் வருண். இவர் வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த சார்லஸ் ராஜ்குமார் மகள் பாலின் (வயது 28) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக வருண் குடும்பத்தினர் பாலினை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தி வந்ததாகவும், இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி பாலின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பாலினின் தாய் சுவிட்லின் சரோஜினி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் ''எனது மகள் சாவிற்கு அவளின் கணவர் வருண், மாமியார் சாந்தகுமாரி ஆகியோரே காரணம். அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் அவள் தற்கொலை செய்து கொண்டாள்" என்று கூறிஇருந்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இந்த வழக்கு குறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.