ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்;
சிவகங்கை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று செயல்பட்டு வரும் 14 குழந்தைகள் இல்லங்களில் இருந்து 30 பேர் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு, உலக அமைதியில் குழந்தைகளின் பங்கு என்ற தலைப்பின் கீழ், தங்களின் கருத்துக்களை ஓவியமாக வரைந்தனர். இந்த ஓவியப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .துரைமுருகன், பாலா, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தின் தலைவா் பகீரதநாச்சியப்பன், நேரு யுவகேந்திரா முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், ஓவியர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.