கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தூத்துக்குடியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு;
தூத்துக்குடி:
தூத்துக்குடி எஸ்.கே.சி. கிரிக்கெட் அணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் தூத்துக்குடி சங்கரப்பேரியில் நடந்தன. இந்த போட்டிகள் லீக் மற்றும் பிளே-ஆப் முறையில் நடந்தன. போட்டியில் கிரீன் ஸ்டார் அணி முதல் பரிசையும், முரா அணியினர் 2-வது பரிசையும், ஸ்மைல் கிங்ஸ் கிரிக்கெட் அணியினர் 3-வது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் பெர்வின், பிரதாப், துரைராஜ், அருள்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.