பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் என்மனம் கொண்டான் ஊராட்சி பகுதியில் (நாகூர்) சாகுல் அமீது பாதுஷா நாயகம் தர்காவில் 466-ம் ஆண்டு கந்தூரி விழா உச்சிப்புளி புது நகரம் முஸ்லிம் ஜமாத்-வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் கடந்த 24-ந்தேதி கொடியேற்று விழா நடந்தது. இதைத்தொடர்ந்து 30-ந் தேதி பானக்கபானை, பீர்வைத்த நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதையடுத்து கந்தூரி விழா, ரவ்லாசரி புக்கு சந்தனம் பூசுதல், கடற்கரைக்கு பீர் ஏகுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நாளை(வெள்ளிக்கிழமை) கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மத நல்லிணத்திற்க்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா பல நூற்றாண்டு காலமாக விளங்கி வருகிறது. இந்த விழாவினை என்மனம்கொண்டான் முஸ்லிம் ஜமாத்தினர், புதுநகரம் முஸ்லிம் ஜமாத்தினரும் நடத்தி வருவது வழக்கம். அதன்படி நடைபெற்ற கந்தூரி விழாவில் புதுநகரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் அஜ்மல்கான் தலைமையில் துணைத்தலைவர் சீனி சிராஜுதீன், செயலாளர் அப்துல்காதர், முன்னாள் தலைவர் முகமது நஹீபு, மலேசியா ஓரிண்டல் மணி சேஞ்ச் நிறுவனர் ஜாகிர் உசேன், நாகூர் கனி, வளர்பிறை நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் மைதீன், முகமது மீரா, முபாரக் அலி, அமீன் மற்றும் மதரசா மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள், நெய் சாதம் வழங்கப்பட்டன.