இன்ஸ்டாகிராம் மூலம் பழகிஆசை வார்த்தைக்கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தைக்கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.;
பெருந்துறை
சென்னிமலை அருகே உள்ள பிடாரியூரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் செல்வகணேஷ் (வயது 22). இவருக்கும் பெருந்துறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தைக்கூறி அந்த சிறுமியை நேரில் அழைத்து செல்வகணேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகணேசை கைது செய்தனர்.