ராமேசுவரத்தில் 31-ந் தேதி பொது வேலைநிறுத்தம்

ராமேசுவரத்தில் 31-ந் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2023-07-13 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் மக்கள் பாதுகாப்பு பேரவையின் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராமேசுவரத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், இந்து அமைப்பினர், பல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராமேசுவரம் கோவிலில் ஆகம விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், கோவிலில் பிரகாரங்களில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை நிரந்தரமாக அகற்றவும், உள்ளூர் பக்தர்கள் வழக்கமான பாதையில் எப்போதும் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு பேரவை பல போராட்டங்களை நடத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும், சங்கங்களும், இணைந்து கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி வருகின்ற 31-ந் தேதி பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்