நாட்டார்மங்கலத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்

நாட்டார்மங்கலத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2023-10-04 18:45 GMT

செஞ்சி, 

வல்லம் கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 3-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் நடந்தது. இதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ், பொருளாளர் அமுதா, துணைத் தலைவர் முருகன், துணைச் செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் தியாகு அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விக்னேஷ், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ராமச்சந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் திலகவதி உள்பட பலா் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நேரில் சென்று தெரியப்படுத்துதல், உற்பத்தி பொருட்களை அதிகப்படுத்துதல், விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண் கடன்களை தெரியப்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இயக்குனர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்