பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2022-09-04 16:18 GMT

தேனி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்க பொதுக்குழு கூட்டம் தேனியில் என்.ஆர்.டி. மன்றத்தில் நடந்தது. இதற்கு சங்க மாநில செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ கழக மாநில பொதுச்செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்தும் வகையிலும், அவர்களின் வரலாற்றை பொதுமக்கள் அறிய செய்யும் வகையிலும் புகைப்பட கண்காட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் பலர் கலந்து கொண்டனர்.




Tags:    

மேலும் செய்திகள்