பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் கூட்டரங்கில் கீழப்பாவூர் யூனியன் சாதாரண கூட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் வளன் ராஜா, தர்மராஜ், முருகேசன், நாகராஜன், ஜான்சி, ஹேமா, மகேஷ்வரி, ராஜேஸ்வரி, ராம உதய சூரியன், ராதாகுமாரி, கனக ஜோதி, சுரேஷ் லிகோரி, அருமை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். யூனியன் துணை தலைவா் முத்துக்குமார் நன்றி கூறினார்.