மாரண்டஅள்ளியில் பராமரிப்பு பணிக்காக 3 நாட்கள் ரெயில்வே கேட் மூடப்படுகிறது
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மற்றும் தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 23-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் அந்த நேரங்களில் ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.