கியாஸ் கசிந்து வீட்டில் தீ

கியாஸ் கசிந்ததில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-08-28 19:45 GMT

கொடைக்கானல் ஆனந்தகிரி 1-வது தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32). இவரது மனைவி அனிதா (24), இவர்களுக்கு கபிலன் (1) என்ற மகன் உள்ளான். இவர்களுடன் உறவினர் புவனேஸ்வரி (48) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் டீ போடுவதற்காக புவனேஸ்வரி சமையலறைக்கு சென்றார். அங்கு கியாஸ் அடுப்பை அவர் பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக புவனேஸ்வரி மீது தீப்பற்றியது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மீதும் தீ மளமளவென பரவியது. அதில் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த சுபாஷ் அனிதா, கபிலன் ஆகியோர் மீதும் தீப்பற்றியது.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்