எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 27 -ந்தேதி நடக்கிறது.;
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள குறைபாடுகள், தடங்கல்கள், சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.