மாலை அணிவிப்பு
நினைவுதினத்தையொட்டி பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாணசுந்தரம் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.;
பட்டுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாணசுந்தரம் நினைவு மண்டபத்தில் கவிஞர் கல்யாணசுந்தரம் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அண்ணாதுரை எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகராட்சிப்பொறியாளர் எல்.குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.