நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்
நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
சோளிங்கரை அடுத்த ஜெ.ஜெ. நகர் பகுதிக்கு செல்லும் சாலை அருகே உள்ள குளத்துக்கு வரும் நீர்வரத்துக் கால்வாயில் அப்பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி அசுத்தம் செய்கிறார்கள். அந்தக் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. அந்தப் குப்பைகளை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.