2-வது நாளாக தீப்பிடித்து எரியும் குப்பை கிடங்கு

திருவண்ணாமலையில் 2-வது நாளாக தீப்பிடித்து எாியும் குப்பை கிடங்கை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-12 17:31 GMT

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர்.

காற்றின் வேகத்தால் தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான இடத்தில் பரவி எரிந்தது. இதனால் அங்கிருந்து வெளியேறிய கரும் புகையினால் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை, போளூர் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் குப்பை கிடங்கில் தீ எரிந்தது. குப்பை கிடங்கு அருகில் கிரிவலப்பாதையில் உள்ள 8-வது லிங்கமான ஈசானிய லிங்கம் கோவில் உள்ளதால் கோவிலுக்கு கிரிவலம் வந்த பொதுமக்களும் புகையினால் அவதி அடைந்தனர்.

குப்பை கிடங்கில் தீ அணைக்கும் பணியை திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் மால் முருகன், தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்திவேல்மாறன், நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்