முத்து மாரியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா
முத்து மாரியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா;
குன்னூர்
குன்னூர் அருகே வெலிங்டன் நல்லப்பன் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் 2-வது வாரத்தில் கரக உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 64-ம் ஆண்டு கரக உற்சவமும், 4-ம் ஆண்டு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் கடந்த 12-ந் தேதி 9 கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காப்பு கட்டுதல், அபிஷேகம், அன்னதானம், திரைகஜோடனைக்கு புறப்படுதல் ஆகியவை நடைபெற்றது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு அபிஷேகம், விளக்கு பூஜை, அன்னதானம், மாவிளக்கு பூஜை, பூப்பல்லக்கு உற்சவம், உச்சி பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று பால்குடம் எடுத்தல், அபிஷேகம், கேட்டில் பவுண்டு முனிஸ்வரர் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை அலகு குத்தி வருதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. அதன்பின்னர் அம்மனின் திருக்கரக திருவீதி உலாவும், கங்கை சேர்தலும் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு, அபிஷேகம், ஊஞ்சல் தாலாட்டு, மறு பூஜை, அன்னதானமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.