கஞ்சா விற்றவர் சிறையில் அடைப்பு

கஞ்சா விற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update: 2022-11-02 18:04 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முதுகுளம் கிராமத்திற்கும், கடலூர் மாவட்டம் பாசிகுளம் கிராமத்திற்கும் இடையே கஞ்சா விற்பதாக தனிப்படை போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பாசிகுளம் புது காலனி தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 38) என்பதும், இவர் இருமாவட்ட எல்லையில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 5 பொட்டலம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தளவாய் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்