கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-24 18:40 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சித்துடையார் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 49). இவர் செந்துறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பதாக தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் செந்துறை தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பால்ராஜ் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து செந்துறை போலீசார் பால்ராஜை கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா விற்றது தொடர்பாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்