மோப்ப நாய்க்கு வைத்திருந்த கஞ்சா - நைசாக திருடி மாட்டிக்கொண்ட போலீஸ்காரர்கள்...!

புதுக்கோட்டையில் கஞ்சா புகைத்ததாக ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2022-08-25 02:46 GMT

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் மோப்ப நாய் பிரிவு அலுவலகம் உள்ளது. இதில் உள்ள மோப்பநாய்களை பராமரிக்க போலீஸ்காரர்கள் தனியாக உள்ளனர்.

இப்பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் சேவியர் ஜான்சன், பழனிசாமி, அஸ்வித் ஆகிய 3 பேர் கஞ்சா புகைத்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் 3 போலீஸ்காரர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்கள் 3 பேரும் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''3 பேரும் பணியில் இருந்தபோது கஞ்சா புகைத்ததன் அடிப்படையிலேயே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்'' என்றனர்.

மோப்ப நாய் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை 3 பேரும் பயன்படுத்தியதாகவும், கஞ்சா இருப்பு குறைந்திருந்ததை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வின்போது கண்டுபிடித்ததாகவும், அதன்பேரில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்